காஷ்மீரைத் தொடர்ந்து ராஜஸ்தானில் லித்தியம் கண்டுபிடிப்பு

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் பகுதியில், இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் தாது பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தியா, மின்சார வாகனத்துறையில் பன்மடங்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, கூடுதலாக, ராஜஸ்தானின் தேகான [நாகூர்] பகுதியில் லித்தியம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், இந்தியாவின் மொத்த லித்தியம் தேவையில் 80% தேவையை இங்கிருந்து நிறைவேற்ற முடியும் […]

கடந்த சில மாதங்களுக்கு முன்னர், ஜம்மு காஷ்மீர் பகுதியில், இந்தியாவில் முதல் முறையாக லித்தியம் தாது பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம், இந்தியா, மின்சார வாகனத்துறையில் பன்மடங்கு முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, கூடுதலாக, ராஜஸ்தானின் தேகான [நாகூர்] பகுதியில் லித்தியம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே, உலக அரங்கில் இந்தியாவின் வளர்ச்சி வேகமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

இதுகுறித்து ஆய்வு செய்த அதிகாரிகள், இந்தியாவின் மொத்த லித்தியம் தேவையில் 80% தேவையை இங்கிருந்து நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளனர். மேலும், லித்தியம் தாது பொருளுக்காக, சீனாவை எதிர்பார்த்து இருப்பது குறையும் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், லித்தியம் துறையில் சீனாவின் ஏகாதிபத்தியம் நிறைவுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், வளைகுடா நாடுகளைப் போல இந்தியாவின் லித்தியம் பொருளுக்கு உலக அளவில் முக்கியத்துவம் ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu