ஜல்லிக்கட்டு தொடர்பாக தமிழ்நாடு அரசு இயற்றிய அவரச சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜல்லிகட்டு போட்டிகளை அனுமதிக்கும் தமிழ்நாடு அரசின் அவசர சட்டத்தை ரத்து செய்யக் கோரி விலங்கு நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த மனுக்களை நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு நவம்பர் 23-ந் தேதி விசாரிக்க தொடங்கியது. இதையடுத்து இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அப்போது நீதிபதிகள் தமிழக அரசின் சட்டத்திருத்தம் அடிப்படை உரிமைகளை மீறவில்லை. ஜல்லிகட்டை அனுமதிக்கும் தமிழ்நாட்டு அரசின் அவசர சட்டம் செல்லும்.
மேலும் போட்டிகளில் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் தமிழ்நாட்டின் சட்டம் உள்ளது. ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகின்றன என்று தெரிவித்துள்ளனர்.