கடந்த மாதம் குடியரசு தின விழாவை குழு விளையாட்டு போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்டது.
பள்ளிக்கல்வித்துறை சார்பில் குடியரசு தினத்தை ஒட்டி பல போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மண்டல மற்றும் மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுக்கோட்டையில் மாநில அளவிலான போட்டிகள் நடைபெற்றது. இதில் பேட்மிட்டன், டென்னிஸ், கோகோ, கபடி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 38 மாவட்ட அணிகள் பங்கேற்றினார். இதன் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் தூத்துக்குடி அணிகள் மோதியது. இதில் தூத்துக்குடி மாவட்டம் முதலிடத்தையும், சென்னை அணி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளது. போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மற்றும் சென்னை மாவட்ட அணிகளில் உள்ள மாணவ - மாணவிகளுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் குழு பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசு தொகுப்பை வழங்கியது.














