பிரபல வீட்டு உபயோக பொருட்கள் உற்பத்தியாளரான வேர்ல்பூல் நிறுவனம் தனது இந்திய பிரிவு பங்குகளை விற்க உள்ளது. இந்த வாரத்தில் வேர்ல்பூல் இந்தியா நிறுவனத்தின் 24% பங்குகள் 451 மில்லியன் டாலர்கள் மதிப்பில் விற்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பங்குச்சந்தை பரிவர்த்தனை மூலம் வேர்ல்பூல் நிறுவனத்தின் பங்குகள் விற்கப்படுகின்றன. ஒரு பங்கு சுமார் 1230 ரூபாய்க்கு விற்கப்படும் என கூறப்படுகிறது. இது நேற்றைய வேர்ல்பூல் பங்கு விலையை ஒப்பிடுகையில் 7.6% சலுகை விலை ஆகும். வேர்ல்பூல் நிறுவனத்தின் பங்கு விற்பனைக்கு கோல்ட்மேன் சாக்ஸ் நிறுவனம் துணை புரிகிறது. கடன் சுமையை குறைக்கும் பொருட்டு இந்த பங்கு விற்பனை மேற்கொள்ளப்படுவதாக வேர்ல்பூல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.