இன்ஸ்டாகிராம் ஸ்டோரி போலவே, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களுக்கு இதய ஈமோஜியுடன் லைக் செய்யும் வசதி விரைவில் அறிமுகமாகிறது.
WABetaInfo தளத்தில் வெளியாகியுள்ள தகவல்களின் படி, பயனர்கள் தங்களுக்கு பிடித்த ஸ்டேட்டஸ்களுக்கு இதய ஈமோஜியை கிளிக் செய்து லைக் செய்யலாம். மேலும், பார்வைகள் பட்டியலில் தங்கள் ஸ்டேட்டஸ் ஐ யார் விரும்பினார்கள் என்பதை பயனர்கள் தெளிவாக பார்க்கலாம். இந்த லைக் அம்சம், தனிப்பட்ட சாட்டை எந்த வகையிலும் பாதிக்காது. மேம்படுத்தப்பட்ட 2.24.17.21 வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் வைத்திருப்பவர்களுக்கு இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது. விரைவில், அனைத்து பயனர்களுக்கும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.