வடக்கு ஜெர்மனியில் உள்ள Brunsbuettel அணுமின் நிலையத்தில் செப்டம்பர் 28 அன்று வாயு வெளியேறும் குழாயில் ஒரு கசிவு ஏற்பட்டதாக Schleswig-Holstein நகரத்தின் எரிசக்தி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கமளித்த அணுஉலை பாதுகாப்பு ஆணையம், Brunsbuettel அணுமின் நிலையம் 2007 ஆம் ஆண்டு முதல் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டின் இறுதியில் அனுமதி வழங்கப்பட்டு ஆலையை அகற்றும் பணி தொடங்கியது. இந்நிலையில்
இந்த குறைபாடுள்ள கசிவு குழாயானது அணுமின் நிலையத்தின் அணு உலை கட்டிடத்தின் தடைசெய்யப்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. அத்துடன் இது சுத்திகரிக்கும் முறையின் ஒரு பகுதியாகும். மேலும் இதில் ஒரு சிறிய கதிரியக்க மாசுபாடு கண்டறியப்பட்டதாக கூறியது. மேலும் அணுஉலை பாதுகாப்பு ஆணையம் இந்த விவகாரத்தில் மதிப்பாய்வுகளை நடத்த வல்லுநர்களை நியமித்துள்ளது.