ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் மற்றும் சோனி நிறுவனங்களுக்கு இடையே நடந்து வந்த 10 பில்லியன் டாலர் மதிப்புள்ள இணைப்பு ஒப்பந்தம் தொடர்பான அனைத்து சர்ச்சைகளும் தற்போது தீர்க்கப்பட்டுள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ஜீ நிறுவனத்தின் பங்கு விலை 15% வரை உயர்ந்து, ₹154.9 என்ற புதிய உச்சத்தைத் தொட்டது. இது முந்தைய முடிவை விட 10% அதிகமாகும்.
சோனி நிறுவனம் முன்னதாக இந்த இணைப்பு ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டது. மீறல்களுக்காக ஜீ நிறுவனத்திடம் இருந்து $90 மில்லியன் டாலர் இழப்பீடு கோரியது. ஜீ நிறுவனமும் சோனி நிறுவனத்திடம் அதே தொகையை இணங்கவில்லை என்பதற்காக கோரியது. தற்போது, சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மையத்தில் நடந்து வரும் மத்தியஸ்தத்தின் அனைத்து உரிமைகோரல்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளும் முடிவுக்கு வந்துள்ளன.