தாய்லாந்தில் சம பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கிடைத்துள்ளது.
தாய்லாந்தில் சம பாலின திருமணத்திற்கு அனுமதி அளிக்கக்கூடிய மசோதா, நாட்டின் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான எம்.பி.க்களின் ஆதரவுடன் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், இந்த மசோதா மன்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. இந்நிலையில், தாய்லாந்தின் மன்னர் இந்த சட்டமசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதன் மூலம், வருகிற ஜனவரி மாதம் இந்த சட்டம் அமலுக்கு வரும் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன் மூலம், தாய்லாந்து தைவான் மற்றும் நேபாளத்திற்கு பிறகு ஆசியாவில் சம பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி அளிக்கும் 3-வது நாடாக தாய்லாந்து உள்ளது.