400 பேருடன் மாஸ்கோவில் இ௫ந்து டெல்லி செல்லும் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.

October 14, 2022

மாஸ்கோவில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் கடிதம் வந்ததாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) அதிகாரிகள் தெரிவித்தனர். மாஸ்கோவில் இருந்து டெர்மினல் 3க்கு (டி3) வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. விமானமானது, மாஸ்கோவில் இருந்து அதிகாலை 3:20 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாக அதிலி௫ந்த 386 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர் . அதைத் தொடர்ந்து பாதுகாப்பு […]

மாஸ்கோவில் இருந்து டெல்லி செல்லும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சல் மூலம் மிரட்டல் கடிதம் வந்ததாக இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் (ஐஜிஐ) அதிகாரிகள் தெரிவித்தனர்.

மாஸ்கோவில் இருந்து டெர்மினல் 3க்கு (டி3) வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் வந்தது. விமானமானது, மாஸ்கோவில் இருந்து அதிகாலை 3:20 மணிக்கு டெல்லி விமான நிலையம் வந்தடைந்ததாக போலீசார் தெரிவித்தனர். உடனடியாக அதிலி௫ந்த 386 பயணிகள் மற்றும் 16 பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர் .
அதைத் தொடர்ந்து பாதுகாப்பு ஏஜென்சியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான நிலையப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் விமானம் முழுமையாக சோதனை செய்யப்பட்டது. ஆனால் இதுவரை வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்படவில்லை.  இ௫ப்பினும் விமானம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரி ஒ௫வர் கூறினார். மேலும் இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் இதுபோன்ற சம்பவம் நடப்பது இது முதல் முறையல்ல என்றும் அதிகாரிகள் அறிவித்தனர்.

இதற்கு முன்பு செப்டம்பர் 10 ஆம் தேதி லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததாகவும், மிரட்டல் விடுத்த நபர் 9/11 தாக்குதல்களின் அடிப்படையில் அமெரிக்கா, லண்டன் செல்லும் ஏர் இந்தியா விமானம் வெடிகுண்டால் தகர்க்கப்படும் என்று கூறியதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu