அதானி எண்டர்பிரைசஸ் பங்குகள் 24% உயர்வு

February 28, 2023

கடந்த வாரத்தின் அனைத்து வர்த்தக நாட்களிலும் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்தன. இந்நிலையில், இன்றைய வர்த்தக நாளின் போது, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் கிட்டத்தட்ட 24.5% உயர்வை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தைப் பொறுத்தவரை, இது ஒரே நாளில் அதிகபட்சமாக உயர்ந்த பங்கு மதிப்பாகும். இன்றைய வர்த்தக நாளில், அதானி எண்டர்பிரைசஸ் ஒரு பங்கின் விலை 1373.3 ரூபாய்க்கு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது. வர்த்தக நாளின் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கினாலும், திடீரென அதானி குழும பங்குகள் […]

கடந்த வாரத்தின் அனைத்து வர்த்தக நாட்களிலும் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிந்து வந்தன. இந்நிலையில், இன்றைய வர்த்தக நாளின் போது, அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனப் பங்குகள் கிட்டத்தட்ட 24.5% உயர்வை சந்தித்துள்ளது. அதானி குழுமத்தைப் பொறுத்தவரை, இது ஒரே நாளில் அதிகபட்சமாக உயர்ந்த பங்கு மதிப்பாகும். இன்றைய வர்த்தக நாளில், அதானி எண்டர்பிரைசஸ் ஒரு பங்கின் விலை 1373.3 ரூபாய்க்கு வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக நாளின் தொடக்கத்தில் சரிவுடன் தொடங்கினாலும், திடீரென அதானி குழும பங்குகள் உயரத் தொடங்கின. அதானி குழுமத்தைச் சேர்ந்த 10 நிறுவனங்களில், 8 நிறுவனங்கள் இன்று உயர்வை சந்தித்துள்ளன. அதிலும் குறிப்பாக, 4 நிறுவனங்கள் 5% க்கும் அதிகமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. குறிப்பாக, அம்புஜா சிமெண்ட்ஸ் 6% மற்றும் அதானி போர்ட்ஸ் 7% உயர்வை பதிவு செய்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu