திருப்பதி மலையில் விரைவில் மலிவு விலை உணவகங்களை திறக்க தேவஸ்தானம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.
திருப்பதி கோவிலில் அடிப்படை வசதிகள் மற்றும் பக்தர்களின் தேவைகளை கண்டறிந்து மேம்படுத்த ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து திருப்பதி மலையில் தேவஸ்தானம் சார்பில் மலிவு விலை உணவகங்களை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் திருப்பதி மலையில் உள்ள உணவகங்களில் விலை கட்டுப்பாடுகளை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று திருப்பதியில் வழங்கப்படும் லட்டின் தரத்தை உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மாதிரி லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன.