கொரோனா தொற்று பரவலுக்கு பின்னர் சென்னையில் தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாடு குறைந்துள்ளது.
இது தொடர்பாக தனியார் டிராவல்ஸ் நிறுவனம் கணக்கெடுப்பு நடத்தியுள்ளது. அதில் 2018-ல் 31 சதவீதமாக இருந்த தனிநபர் வாகன பயன்பாடு 2022-ல் 25 சதவீதமாக குறைந்துள்ளது. சென்னை மெட்ரோ ரெயில் பொதுப் போக்குவரத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியுள்ளது. தினசரி பயணிகளின் எண்ணிக்கை கடந்த காலத்தில் 2 லட்சமாக இருந்தது. சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் 19 இடத்தில் 4 சக்கர வாகன பார்க்கிங் வசதி உள்ளது.