ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைக்கோள் சேவைகளை
உக்ரைனுக்காகப் பெறுவதற்கு பாதுகாப்புத் துறை ஒப்பந்தம் செய்திருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
உக்ரைனின் தகவல் தொடர்பு வலையமைப்பில் சாடில்லைட் தகவல்
தொடர்பு பரிமாற்றம் இன்றிமையாதது. ஆதலால் இந்த ஒப்பந்தம் செய்துள்ளதாக செய்தி அறிக்கை கூறுகிறது. இதற்கு முன்பு ஸ்டார் லிங்க் செயற்கைக்கோளை உக்ரேனிய இராணுவத்தினர் தகவல் தொடர்புக்கு பயன்படுத்திய போது ரஷ்யா அதனை தடுக்க முயற்சித்தது குறிப்பிடத்தக்கது.