அமெரிக்காவின் எப்.பி.ஐ. உயரதிகாரி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
அமெரிக்காவின் எப்.பி.ஐ. எனப்படும் மத்திய விசாரணை அமைப்பின் சர்வேதச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குநர் ரேமண்ட் டுடா இன்று இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார்.
இதுபற்றி இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ளது. அதில் புதுடெல்லிக்கு எப்.பி.ஐ. சர்வேதச இயக்கங்களுக்கான பிரிவின் உதவி இயக்குநர் ரேமண்ட் டுடாவை வரவேற்பதில் மகிழ்ச்சி. அவரது இந்த பயணத்தின்போது, இந்திய சட்ட அமலாக்க முகமைகளுடன் எப்.பி.ஐ.யின் ஒத்துழைப்பை மேம்படுத்துவார். சர்வதேச குற்றங்களை எதிர்கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியப்படுகிறது என்று தெரிவித்து உள்ளது.