இணை மற்றும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான விண்ணப்பக் கால அவகாசம் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது
அரசு சட்டக் கல்லூரிகளில் இணை பேராசிரியர், உதவிப் பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கப்படும் கால அவகாசம் 18ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அரசுத்துறை சட்டக் கல்லூரிகளில் நிலவும் இணை, உதவி பேராசிரியர் மற்றும் உதவிப் பேராசிரியர் (சட்ட முன்படிப்பு) பணியிடங்களுக்கு தேர்வின் மூலம் நியமனம்செய்யப்படுவதாகவும், இதற்கான அறிவிப்பு எண். 01 / 2025, 24.01.2025 அன்று வெளியிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் இணையவழி மூலம் கோரப்பட்டு வருகின்றன. விண்ணப்பதாரர்களிடமிருந்து கிடைத்த பல கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசத்தை 03.03.2025க்குப் பதிலாக 18.03.2025 மாலை 5.00 மணி வரை நீட்டித்து வெளியிடப்பட்டுள்ளது.