தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசிடம் இருந்து வரவேற்கப்படுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை தலைவராக கொண்ட மாவட்ட குழு விண்ணப்பிக்கும் ஆசிரியர்களில் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிற 25-ம் தேதிக்குள் மாநில தேர்வு குழுவிற்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கான தகுதி உள்ள ஆசிரியர்களை தேர்வு செய்யும் பொழுது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இயக்குனர் அளித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்களை https://nationalawardstoteachers.education.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது