தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு வருட பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மத்திய தொழில் பழகுநர் பயிற்சி வாரியத்துடன் இணைந்து 2020,2021, 2022 மற்றும் 2023 ஆம் வருடங்களில் இன்ஜினியரிங் மற்றும் டிப்ளமோ பட்டப்படிப்புகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாடு மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதற்கு தகுதி உள்ள மாணவர்கள் தங்களது விண்ணப்பங்களை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் இது குறித்த விவரங்களுக்கு www.boat-srp.com என்ற இணையதளத்தில் இருந்து தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 31.7. 2024 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.