மின் மீட்டர் வாடகை ரத்து செய்ய கோரிக்கை

August 4, 2023

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் வசூலிக்கப்படும் மின்மீட்டருக்கான வாடகை தொகையை ரத்து செய்ய தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு மீட்டர்களுக்கு என ஒரு மாதத்திற்கு ரூ.60 என இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 120 ரூபாய் வாடகை ஆக வசூலிக்க தமிழக மின்சார வாரியம் முடிவு எடுத்துள்ளது. இது செப்டம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். […]

தமிழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் வசூலிக்கப்படும் மின்மீட்டருக்கான வாடகை தொகையை ரத்து செய்ய தமிழ்நாடு வணிகர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள மின் இணைப்பு மீட்டர்களுக்கு என ஒரு மாதத்திற்கு ரூ.60 என இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை 120 ரூபாய் வாடகை ஆக வசூலிக்க தமிழக மின்சார வாரியம் முடிவு எடுத்துள்ளது. இது செப்டம்பர் மாதம் முதல் அமுலுக்கு வரவுள்ளது. இதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.

இது வணிகர்களுக்கு சுமையை அதிகரிக்கும், வணிகத்தை விட்டு வெளியேறும் நிலையாய் மாறும். இதனை தமிழக அரசு கவனத்தில் கொண்டு மின் மீட்டர் வாடகை, மின் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும் எனவும், மக்கள் மற்றும் வணிகர்களின் நலன் காக்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் செப்டம்பர் 5ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தென்மண்டலம் சார்பாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வணிக நிர்வாகிகள் நேரில் சந்தித்து முறையிட உள்ளனர். இதில் ஜிஎஸ்டி சார்ந்த வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்க மற்றும் அனுமதிக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் 28% வரி விகிதத்தை குறைப்பது பற்றியும் வலியுறுத்தியும் பேச இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் ஏ.எம். விக்ரமஜராஜா அறிக்கையில் கூறியிருக்கிறார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu