நவம்பர் 9 ஆம் தேதி முதல் பாரத் கவுரவ் தீபாவளி சுற்றுலா ரயில் தொடங்கப்படுகிறது.தென்காசியில் இருந்து காசிக்கு வரும் நவம்பர் ஒன்பதாம் தேதி முதல் பாரத் கவுரவ் எனப்படும் தீபாவளி சுற்றுலா ரயில் தொடங்கப்படுகிறது. இந்திய ரயில்வே ஐ.ஆர்.சி.டி.சி சுற்றுலா பயணிகளுக்காக இந்த ரயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்ற பெயரில் தொடங்குகிறது. தீபாவளி அன்று காசியில் உள்ள கங்கை நதியின் புனித நீராடலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா ராமேஸ்வரத்தில் ராமநாதசுவாமி தரிசனத்தோடு நிறைவடைகிறது. இதில் மூன்று அடுக்கு குளிர்சாதனப்பெட்டிகள், எட்டு படுக்கை வசதி பெட்டிகள், பேட்டரி கார் போன்றவை இடம் பெறுகின்றன.இது தென்காசியில் இருந்து புறப்பட்டு ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, சிதம்பரம், சென்னை, காசி அலகாபாத்யா வழியாக செல்கின்றன. நவம்பர் 16ஆம் தேதி ராமேஸ்வரம் பின் வந்து பின்னர் 17ஆம் தேதி தென்காசியை சென்றடைகிறது. இதற்கு சாதாரண பயண கட்டணம் ரூபாய் 16850 ஆகவும், மூன்றடுக்கு ஏசி வகுப்புகளுக்கு 30,500 எனவும் வசூலிக்கப்படுகிறது.