அதிபர் போட்டியில் இருந்து பிடென் விலக வலியுறுத்தல்

July 4, 2024

அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற அதிபர் ஜோ பிடெனுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக தகவல் வந்துள்ளது. அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் முறையாக பிடெனுக்கும் டிரம்புக்கும் நேரடி விவாதம் நடைபெற்றது. அப்பொழுது விவாதத்தின் போது பிடென் தடுமாறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்று ஆளும் […]

அதிபர் தேர்தலுக்கான போட்டியிலிருந்து விலக வேண்டும் என்ற அதிபர் ஜோ பிடெனுக்கு நெருக்கடி அதிகரித்து வருவதாக தகவல் வந்துள்ளது.

அமெரிக்காவில் செப்டம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் முதல் முறையாக பிடெனுக்கும் டிரம்புக்கும் நேரடி விவாதம் நடைபெற்றது. அப்பொழுது விவாதத்தின் போது பிடென் தடுமாறினார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த துணை அதிபர் கமலா ஹாரிஸை தேர்தலில் போட்டியிட வைக்க வேண்டும் என்று ஆளும் கட்சிக்குள் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. பிடெனின் வாதிடும் திறன் மோசமாக உள்ளதால் அவர் தேர்தலில் வெற்றி பெறுவது கடினம். எனவே அவர் போட்டியிலிருந்து விலக வேண்டும் என்று அவருடைய கட்சியினரே கூறி வருகின்றனர். அவரை வலியுறுத்த 25 ஜனநாயக கட்சி எம்பிக்கள் தயாராக உள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் அப்படி விலகும் பட்சத்தில் கமலா ஹாரிஸ் ட்ரம்பை எதிர்த்து களமிறங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே போட்டியில் இருந்து விலகுவதாக வரும் செய்தியை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu