புளூ டிக் கட்டண சேவை வரும் 29-ந்தேதி முதல் அமல் - எலான் மஸ்க்

November 16, 2022

டுவிட்டரில் புளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் முறை வரும் 29-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிப்படுத்தி கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் […]

டுவிட்டரில் புளூ டிக்கிற்கு கட்டணம் செலுத்தும் முறை வரும் 29-ந்தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

சமூக ஊடக நிறுவனங்களில் ஒன்றான டுவிட்டரை உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த அக்டோபர் இறுதியில் விலைக்கு வாங்கினார். இந்த டுவிட்டரை பயன்படுத்துவோருக்கான சிறப்பம்சங்களில் ஒன்றாக, தங்களுடையது அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு என உறுதிப்படுத்தி கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும். இந்த புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை (19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது என முதலில் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.

இதன்படி, டுவிட்டரில் தற்போது மஸ்க் வெளியிட்ட செய்தியில், ஒரு சில மாதங்களில் கட்டணம் கட்டாத அனைத்து புளூ டிக் குறியீடுகளும் நீக்கப்படும் என தெரிவித்து உள்ளார். அதாவது இதற்கு முன்பு புளூ டிக் வசதி பெற்றவர்கள், அதனை தொடர்ந்து நீடிக்க செய்ய அதற்கான கட்டணம் செலுத்த வேண்டும். புது அறிவிப்பின் இடையே, யாரேனும் தங்களது டுவிட்டரின் அதிகாரப்பூர்வ பெயரை மாற்ற முற்பட்டால், அது புளூ டிக் குறியீடு இழப்புக்கு வழிவகுக்கும். அந்த பெயரை டுவிட்டர் நிறுவனம், சேவை விதிகளுக்கு உட்பட்டு உறுதி செய்யும் வரை பெயரை பெற முடியாமல் இழக்க நேரிடும் என்றும் மஸ்க் கூறியுள்ளார். புளூ டிக் கட்டண சேவை அறிவிப்பை மஸ்க் வெளியிட்ட பின்னர், 2 நாட்களுக்குள் கடந்த 11-ந்தேதி அதனை தற்காலிக நிறுத்தம் செய்து வைத்துள்ளார். போலி கணக்குகள் புளூ டிக் சேவையுடன் இருப்பது பற்றி அறிந்ததும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த சூழலில், புளூ டிக் கட்டண சேவை வருகிற 29-ந்தேதி மீண்டும் அமலுக்கு வரும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu