இந்தியாவின் 13 பெரிய தொழில்நிறுவனங்களின் தலைவர்கள், நிர்வாகிகள் இங்கிலாந்து பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்தனர்.
இந்த கூட்டம் லண்டனில் இங்கிலாந்து பிரதமர் இல்லத்தில் நடைபெற்றது. பாா்தி குழுமம், டாடா ஸ்டீல், ரிலையன்ஸ், டிவிஎஸ் மோட்டார்ஸ், ஹீரோ என்டா்பிரைசஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த சந்திப்பு இரு நாடுகளின் உறவுகளை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்றது என இங்கிலாந்து அரசாணை கூறியது. இந்திய நிறுவனங்கள் அந்நிய நேரடி முதலீட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் முக்கியமானது என்று பாா்தி குழுமத் தலைவர் சுனில் பாா்தி மிட்டல் தெரிவித்தார்.