தமிழகத்துக்கு முழு அளவு நிலக்கரியை வழங்கியது மத்திய அரசு

January 24, 2023

தமிழகத்துக்கு முழு அளவு நிலக்கரியை மத்திய அரசு வழங்கியுள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி மின்சார உற்பத்திக்கு 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சார், ஐபி வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து இந்த நிலக்கரி பெறப்படுகிறது. வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்போது, வழக்கத்தைவிட மின்தேவையும் அதிகரிக்கும். இதனால், ஒதுக்கப்பட்ட நிலக்கரியை முழுவதுமாக அனுப்புமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு தமிழக […]

தமிழகத்துக்கு முழு அளவு நிலக்கரியை மத்திய அரசு வழங்கியுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்துக்கு 4,320 மெகாவாட் திறனில் 5 அனல்மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் தினசரி மின்சார உற்பத்திக்கு 7.20 கோடி கிலோ நிலக்கரி தேவை. ஒடிசா மாநிலத்தில் உள்ள தால்சார், ஐபி வேலி ஆகிய சுரங்கங்களில் இருந்து இந்த நிலக்கரி பெறப்படுகிறது. வரும் நாட்களில் கோடை வெப்பம் அதிகரிக்கத் தொடங்கும்போது, வழக்கத்தைவிட மின்தேவையும் அதிகரிக்கும். இதனால், ஒதுக்கப்பட்ட நிலக்கரியை முழுவதுமாக அனுப்புமாறு மத்திய நிலக்கரி அமைச்சகத்துக்கு தமிழக மின்வாரியம் கோரிக்கை விடுத்தது.

அதை ஏற்று, தற்போது தமிழகத்துக்கு தினமும் 7 கோடி கிலோ நிலக்கரி அனுப்பி வைக்கப்படுகிறது. இதனால், தமிழ்நாடு மின்வாரியத்தின் அனல்மின் நிலையங்களில் 8 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu