சென்னை எழும்பூர் - திருச்சிராப்பள்ளி இடையே இயக்க படும் சோழன் விரைவு ரயில் மற்றும் சென்னை - குருவாயூர் விரைவு ரயில் ஆகிய ரயில்களின் நேரம் மாற்றப்பட உள்ளது.
சென்னையில் பராமரிப்பு பணிகளின் காரணமாக சென்னையில் இருந்து இயக்கப்படும் சோழன் மற்றும் குருவாயூர் ரயில்களின் நேரம் ஆகஸ்ட் 14
ஆம் தேதி முதல் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
சென்னை எழும்பூரில் இருந்து திருச்சிராப்பள்ளிக்கு காலை 7. 15 க்கு புறப்பட வேண்டிய சோழன் விரைவு ரயில் காலை 7.45 மணிக்கு புறப்படும். இந்த ரயில் திருச்சிராப்பள்ளிக்கு 2.30 மணிக்கு பதிலாக பிற்பகல் 3 மணிக்கு சென்றடையும்.
அதேபோல் திருச்சிராப்பள்ளியில் இருந்து காலை 10. 15 க்கு புறப்பட வேண்டிய ரயில் காலை 11 மணிக்கு புறப்படும். இது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு 5.30 மணிக்கு பதிலாக 6.15 மணிக்கு வந்தடையும். சென்னை எழும்பூர்- குருவாயூர் இயக்கப்படும் விரைவு ரயில் காலை 9 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும். இந்த இரு ரயில்களின் நேரம் மற்றும் ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.