புகார்கள் மீது நடவடிக்கை எடுக்காத அரசு ஊழியர்கள்: அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது

November 5, 2022

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி. மோகன்ராஜ், கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்தும் வகையில் மோகன்ராஜ் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்ததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் […]

புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் அரசு அதிகாரிகள் கால தாமதம் செய்வது அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஐ.ஏ.எஸ் அதிகாரியான வி. மோகன்ராஜ், கடந்த 2016 ஆம் ஆண்டு ஃபைனான்சியர் முகுந்த்சந்த் போத்ராவிடம் பத்து லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார். கடனை திருப்பி செலுத்தும் வகையில் மோகன்ராஜ் கொடுத்த காசோலை வங்கியில் பணம் இல்லாததால் திரும்பி வந்ததால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கக்கோரி அப்போதைய தலைமைச் செயலாளரிடம் பைனான்சியர் போத்ரா புகார் அளித்தார். புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி போத்ரா கடந்த 2016ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். பைனான்சியர் போத்ரா உயிரிழந்ததை அடுத்து, அவரது மகன் ககன்போத்ரா இந்த வழக்கை நடத்தி வந்தார் .

இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், புகார் குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, மோசடி வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

மேலும், நடவடிக்கை எடுக்கக்கோரி சில விவரங்களோடு புகார்கள் அளிக்கப்பட்டால் அந்த புகார் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எந்த ஒரு கால தாமதமும் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார்கள் மீது காலதாமதம் செய்யாமல் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் எதிர்காலத்தில் துறை ரீதியான நடவடிக்கைகளை எதிர்கொள்வதை தவிர்க்கலாம் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu