உத்தரகாசி மாவட்டத்தின் தாராலி பகுதியில் இன்று பெய்த கனமழை காரணமாக கீர் கங்கா நதியில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தது. இதனால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாராலி கிராமத்தில் பலர் வெள்ளத்தில் சிக்கினர். மேக வெடிப்பால் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளத்தில் வீடுகள், ஓட்டல்கள் மற்றும் தங்குமிடங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
தீவிர பாதிப்பு ஏற்பட்டுள்ள தாராலி கிராமத்தில் வீடுகள் முற்றிலும் சேதமடைந்தவர்களுக்கு உடனடி நிவாரணமாக ₹5 லட்சம் வழங்கப்படும் என உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மாநில அரசு நிலைமையை கட்டுப்படுத்த அனைத்தும் நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.