சூரிய கதிர்வீச்சில் அட்லஸ் வால் நட்சத்திரம் - SOHO எடுத்த காணொளிக்கு வரவேற்பு

October 10, 2024

சூரியனை தொடர்ந்து கண்காணித்து வரும் SOHO விண்கலம், அக்டோபர் 7 அன்று, எதிர்பாராத விதமாக சூரிய கதிர்வீச்சில் அட்லஸ் வால் நட்சத்திரம் தோன்றியதை படம்பிடித்துள்ளது. C/2023 A3 (Tsuchinshan-ATLAS) என்று அழைக்கப்படும் இந்த வால்மீன், தனது பிரமாண்டமான வால் மற்றும் கோமாவுடன் சூரியனை மறைத்து நிற்கும் அழகிய காட்சியை படம் பிடித்த SOHO வின் திறனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. C/2023 A3 (Tsuchinshan-ATLAS) வால்மீனின் கோமா சுமார் 130,000 மைல்கள் அகலமும், வால் 18 மில்லியன் […]

சூரியனை தொடர்ந்து கண்காணித்து வரும் SOHO விண்கலம், அக்டோபர் 7 அன்று, எதிர்பாராத விதமாக சூரிய கதிர்வீச்சில் அட்லஸ் வால் நட்சத்திரம் தோன்றியதை படம்பிடித்துள்ளது. C/2023 A3 (Tsuchinshan-ATLAS) என்று அழைக்கப்படும் இந்த வால்மீன், தனது பிரமாண்டமான வால் மற்றும் கோமாவுடன் சூரியனை மறைத்து நிற்கும் அழகிய காட்சியை படம் பிடித்த SOHO வின் திறனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

C/2023 A3 (Tsuchinshan-ATLAS) வால்மீனின் கோமா சுமார் 130,000 மைல்கள் அகலமும், வால் 18 மில்லியன் மைல்கள் வரை நீண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, இந்த வால்மீனை இன்னும் பல நாட்களுக்கு நாம் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அக்டோபர் 10 மற்றும் 11 ஆம் தேதிகளில், சூரியன் மறையும் நேரத்தில், அடிவானுக்கு அருகில் தொலைநோக்கி மூலம் இந்த வால்மீனை நாம் பார்க்கலாம் என்று தெரிவித்துள்ளனர். SOHO விண்கலம் எடுத்துள்ள புகைப்படங்களில், சூரியனில் ஏற்பட்ட சக்திவாய்ந்த எக்ஸ்-கிளாஸ் சூரியப் புயல்களும் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu