சனாதனம் குறித்த திமுகவின் கருத்தை ஏற்கவில்லை என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பவன்கெரா கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நேற்று டெல்லியில் சனாதனம் குறித்த கருத்துக்களை நாங்கள் ஏற்கவில்லை என பேட்டி கொடுத்துள்ளார். பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது எங்களைப் பொறுத்தவரை மதங்கள், நம்பிக்கைகளை மதிக்கிறோம். அவற்றை அவதூறாக பேசக்கூடாது. இது மாதிரியான கருத்துக்களை இந்திய அரசியலமைப்பு சாசனம் இதுவரை ஏற்றது இல்லை. சனாதன தர்மம் குறித்து திமுக தலைவர் கூறிய கருத்தை நாங்கள் ஒருபோதும் ஏற்கவில்லை. நரேந்திர மோடி ஒருவரின் கருத்தை திரித்து கூற விரும்பினால் தாராளமாக பேசட்டும். இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் அனைத்து மதங்கள் சமுதாயங்கள் மற்றும் நம்பிக்கைகளை மதிக்கின்றன. நாட்டு மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்த்து வருகிறோம். பிரிவினையை தூண்டும் சக்திகளோடு போராடி வருகிறோம். இந்தியா,பாரத் இரண்டுமே ஒன்றுதான். இந்த விவகாரத்தில் மக்களிடையே குழப்பத்தை பாஜக ஏற்படுத்தி வருகிறது என கூறியுள்ளார்.














