தமிழகத்தில் கடந்த பத்து மாதங்களில் மட்டும் ரூபாய் 425 கோடியை சைபர் கிரைம் மோசடியில் பொதுமக்கள் இழந்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சைபர் கிரைம் மோசடிகளில் கடந்த 10 மாதங்களில் மட்டும் பொதுமக்கள் ரூபாய் 425 கோடியை இழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 65,426 சைபர் கிரைம் புகார்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு 1930 என்ற உதவி எண் மூலம் 21,770 புகார் அழைப்புகள் வந்துள்ளது. இதில் திருடு போன 338 கோடியை தமிழக சைபர் கிரைம் போலீசார்கள் உரியவர்களிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும் 42 குற்றவாளிகள் குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டுள்ளனர். மோசடிக்கு பயன்படுத்தப்பட்டுள்ள 29,530 சிம் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.














