இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4 நாட்களுக்கு பிறகு இன்று 10 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,111 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 2,284, டெல்லியில் 1,634, அரியானாவில் 839, மகாராஷ்டிராவில் 650, உத்தரபிரதேசத்தில் 706, தமிழ்நாட்டில் 514 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 48 லட்சத்து 27 ஆயிரத்து 226 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பால் நேற்று குஜராத்தில் 6 பேர், ராஜஸ்தானில் 3 பேர், உத்தபிரதேசத்தில் 4 பேர் உள்பட 24 பேர் இறந்துள்ளனர்.