சிறார்களுக்கான வைப்பு கணக்குகள் திறப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கி சிறார்களுக்கு சுருக்கமான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட சிறார்கள் தற்போது சேமிப்பு மற்றும் கால வைப்பு கணக்குகளை தங்களுக்கு நேரடியாக திறந்து நிர்வகிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்பிஐ சுற்றறிக்கையின் படி, வங்கிகள் சிறார்களுக்கு நெட் பேங்கிங் சேவை, ஏடிஎம், டெபிட் கார்டுகள் மற்றும் காசோலை புத்தகங்கள் போன்ற கூடுதல் சேவைகளை வழங்க முடியும். இருப்பினும், சிறார்களின் கணக்குகளில் அதிகமாக பணம் எடுக்க அனுமதிக்கப்படுவதில்லை என்றும், இதனை வங்கிகள் உறுதி செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.