மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

January 31, 2023

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மின் இணைப்பு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் […]

மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மானியம் பெறும் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து மின் இணைப்பு உள்ளவர்கள் தங்களது ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடியே 67 லட்சம் மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இதில் இதுவரை 2 கோடியே 34 லட்சம் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்களை இணைத்துள்ளனர். இதை அமைச்சர் செந்தில் பாலாஜி டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.

ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்பதால் அதற்கு மேல் கால அவகாசம் வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 15-ந்தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu