சுக்மா மாவட்டத்தில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் இன்று நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 10 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். பெஜ்ஜி காவல் நிலைய அதிகார வரம்பில் உள்ள காட்டுப் பகுதியில் பாதுகாப்புப்படையினர் நக்சலைட்டுகளுக்கு எதிரான ஆபரேசனில் ஈடுபட்டனர். இந்த சண்டையில் 10 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர், மேலும் அவர்களது உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. பாதுகாப்புப் படையினர், கேராஜ்குடா, தந்தேஸ்புரம், நகராம், பந்தர்பாதர்
கிராமங்களில் நடத்திய தேடுதலின் போது, ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், சுக்மா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெற்றிகரமாக பலர் கைது செய்யப்பட்டனர், மற்றும் மொத்தம் 207 நக்சலைட் உடல்கள் மீட்கப்பட்டன.