மணிப்பூரில் அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு

September 20, 2025

பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில், அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர். மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலில், ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இம்பாலிலிருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த வீரர்கள் மீது மாலை 6 மணியளவில் நம்போல் சபால் லெய்கை பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மூன்று […]

பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஆயுதமேந்திய கும்பல் நடத்திய தாக்குதலில், அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 3 வீரர்கள் காயமடைந்தனர்.

மணிப்பூரில் நிலவும் பதற்றமான சூழலில், ஆயுதமேந்திய குழு அசாம் ரைபிள்ஸ் வீரர்கள் சென்ற வாகனம் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியது. இம்பாலிலிருந்து பிஷ்னுபூர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்த வீரர்கள் மீது மாலை 6 மணியளவில் நம்போல் சபால் லெய்கை பகுதியில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த மூன்று வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.மணிப்பூரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக வன்முறைகள் தொடர்ந்த நிலையில், இன்னும் அமைதி நிலைமை ஏற்படாத சூழலில் இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி மணிப்பூருக்கு சென்றிருந்தார். தற்போது மாநிலம் ஜனாதிபதி ஆட்சிக்குள் செயல்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu