ஐரோப்பாவின் முதல் வியாழன் கோள் திட்டம் தொடக்கம்

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ESA, JUICE என்ற பெயரில், வியாழன் கோளை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இன்று இந்த திட்டத்திற்கான விண்கலம் ஏவப்படுகிறது. Jupiter Icy Moons Explorer என்பதன் சுருக்கமே ஜூஸ் என்று அழைக்கப்படுகிறது. இன்று விண்ணில் ஏவப்படும் விண்கலம், வியாழன் கோளின் நிலவுகளான Ganymede, Callisto, Europa ஆகியவற்றை குறித்து ஆராய்ச்சி செய்ய உள்ளது. குறிப்பாக, அங்கு தண்ணீர் உள்ளதா? என்றும், உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அங்கு உயிர்கள் ஏதேனும் உள்ளதா? […]

ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ESA, JUICE என்ற பெயரில், வியாழன் கோளை ஆய்வு செய்யும் திட்டத்தை தொடங்கியுள்ளது. இன்று இந்த திட்டத்திற்கான விண்கலம் ஏவப்படுகிறது. Jupiter Icy Moons Explorer என்பதன் சுருக்கமே ஜூஸ் என்று அழைக்கப்படுகிறது. இன்று விண்ணில் ஏவப்படும் விண்கலம், வியாழன் கோளின் நிலவுகளான Ganymede, Callisto, Europa ஆகியவற்றை குறித்து ஆராய்ச்சி செய்ய உள்ளது. குறிப்பாக, அங்கு தண்ணீர் உள்ளதா? என்றும், உயிர் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அங்கு உயிர்கள் ஏதேனும் உள்ளதா? என்பது குறித்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.

இன்று விண்வெளியில் ஏவப்படும் விண்கலம், ஏழரை ஆண்டுகள் கழித்து, வியாழன் கோளை சென்றடையும். வரும் 2031 ஆம் ஆண்டு முதல் தனது ஆய்வு பணியைத் தொடங்கும். ஆய்வுப் பணிக்காக, விண்கலத்தில் 10 கருவிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. புகைப்படங்களை எடுப்பதற்கு வசதியாக அதிநவீன கேமரா அம்சங்கள், ஸ்பெக்ட்ரோ மீட்டர், மைக்ரோ மீட்டர் உள்ளிட்ட பல்வேறு கருவிகள் இதில் அடங்கும். இந்திய நேரப்படி இன்று மாலை 5:15 மணிக்கு இந்த விண்கலம் ஏவப்படுகிறது. இதனை ஐரோப்பிய விண்வெளி நிலையம் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu