முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் உருவாக்கும் சமூக வலைத்தளம் - ஸ்பில்

February 2, 2023

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலர் ட்விட்டருக்கு போட்டியாக ஸ்பில் (SPILL) என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. ட்விட்டர் நிறுவனத்தில் பணிநீக்கத்திற்கு ஆளானவர்கள் மற்றும் தாமாக பணியிலிருந்து விலகியவர்கள் இணைந்து ஸ்பில் தளத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை அவர்கள் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், ஸ்பில் தளத்திற்கான நிதி சார்ந்த ஆதாரம் மற்றும் வேலைக்கு ஆள் சேர்ப்பது குறித்த தகவல்களும் […]

ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலர் ட்விட்டருக்கு போட்டியாக ஸ்பில் (SPILL) என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தில் பணிநீக்கத்திற்கு ஆளானவர்கள் மற்றும் தாமாக பணியிலிருந்து விலகியவர்கள் இணைந்து ஸ்பில் தளத்தை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஸ்னீக் பீக் வீடியோ ஒன்றை அவர்கள் ட்விட்டர் தளத்தில் பகிர்ந்துள்ளனர். மேலும், ஸ்பில் தளத்திற்கான நிதி சார்ந்த ஆதாரம் மற்றும் வேலைக்கு ஆள் சேர்ப்பது குறித்த தகவல்களும் ட்விட்டரில் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில், சமூக வலைத்தளங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, இந்த புதிய தளத்தின் செயல்பாடு மக்களை எந்த அளவிற்கு ஈர்க்கும் என்பதை காத்திருந்து அறிய வேண்டும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu