சேப்பாக்கம் ரஞ்சிக் கோப்பை போட்டியில் ரசிகர்களுக்கு இலவச அனுமதி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ரஞ்சிக் கோப்பை போட்டியை நாளை ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது. ரஞ்சிக் கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி தனது 6 ஆவது லீக் ஆட்டத்தில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. 2023- 2024 சீசனில் இதுவரை தமிழ்நாடு அணி 5 போட்டிகள் விளையாடியதில் மூன்று போட்டிகள் […]

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள ரஞ்சிக் கோப்பை போட்டியை நாளை ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

ரஞ்சிக் கோப்பைக்கான போட்டிகள் நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழ்நாடு அணி தனது 6 ஆவது லீக் ஆட்டத்தில் கர்நாடகா அணியை எதிர்த்து நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாட உள்ளது. 2023- 2024 சீசனில் இதுவரை தமிழ்நாடு அணி 5 போட்டிகள் விளையாடியதில் மூன்று போட்டிகள் வெற்றி, ஒரு போட்டி டிரா, ஒரு போட்டி தோல்வி அடைந்துள்ளது. எலைட் குரூப் ஜி பிரிவில் இடம்பிடித்து உள்ள தமிழக அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடம் வகித்து வருகிறது. இதில் கர்நாடக அணி இரண்டாவது இடத்திலும், திரிபுரா அணி மூன்றாவது இடத்திலும், குஜராத் அணி நான்காவது இடத்திலும் உள்ளது. இந்நிலையில் நாளை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியினை ரசிகர்கள் இலவசமாக நேரில் கண்டு ரசிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu