சென்னையில் ஆபரத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.
மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி பொருட்களுக்கான இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் தாக்கம் உடனடியாக தங்கம் விலையில் எதிரொலிக்க தொடங்கியது. இதன் காரணமாக தங்கம் விலை புதிய உச்சம் தொட்டு வரலாறு காணாத வகையில் உயர்ந்தது. ஒரு பவுன் தங்கம் ரூ.44 ஆயிரத்தை தாண்டியது. அதாவது பவுன் ரூ.44 ஆயிரத்து 40-க்கும், ஒரு கிராம் ரூ.5,505-க்கும் விற்பனை ஆனது. வெள்ளி விலையும் ஒரு கிராம் ரூ.77.80 ஆக உயர்ந்து புதிய உச்சம் தொட்டது.
இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ. 65 குறைந்து ஒரு கிராம் ரூ. 5,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்து ஒரு சவரன் ரூ. 43,520 விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல ஒரு கிராம் வெள்ளி ரூ.1.40 குறைந்து ரூ.76.40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.