சென்னையில் ஆபரணத்தாங்கத்தின் விலை புதிய உச்சத்தை அடைந்துள்ளது.
சென்னையில் தங்கத்தின் விலை தொடர்ந்து மாற்றமடைகிறது. கடந்த வாரத்தின் தொடக்க நாளில், தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனையானது. ஆனால், இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து, சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ரூ.60,200-க்கும், கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ரூ.7,525-க்கும் விற்பனையாகிறது.
அதே நேரத்தில், வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.104-க்கு, பார் வெள்ளி ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.