ஐஐடி.களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் குறித்த வழிகாட்டுதல் வெளியீடு - தமிழக அரசு

ஐஐடி.களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறைசெயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் இளநிலை பட்டப்படிப்புக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். ஐஐடி […]

ஐஐடி.களில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு கல்விக்கட்டணம் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக உயர்கல்வித் துறைசெயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணையில், ஐஐடி, ஐஐஎம், எய்ம்ஸ் போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கையை ஊக்குவிக்கும் வகையில் இளநிலை பட்டப்படிப்புக்கான முழு செலவையும் மாநில அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். ஐஐடி உள்ளிட்ட மத்திய கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் அதற்கான ஆவணங்களுடன் தங்களது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பின் ஆட்சியர் மாணவருக்கான மொத்த செலவின விவரங்களை தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.
மாணவர் விவரம், மாவட்ட ஆட்சியர் மற்றும் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தின் பரிந்துரைகளை பரிசீலித்து முதலாம் ஆண்டிலேயே 4 ஆண்டுகளுக்கான செலவினத் தொகைக்கும் நிர்வாக ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிடப்படும். இதில் குறிப்பாக சாதி, வருமானத்தை கணக்கில் கொள்ளாமல் ஒப்புதல் அளிக்கப்படும்.

மேலும், இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மாணவர்கள் 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்ததற்கு சான்றாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் தரும் சான்றிதழ், தமிழக இருப்பிடச் சான்றிதழ், உயர்கல்வி சேர்க்கை ஆணை, கல்வி நிறுவன அனைத்து கட்டண விவரங்கள் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu