புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் எஸ் எஸ் சந்து நியமனம்

March 14, 2024

வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த 2 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதன்படி, புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் எஸ் எஸ் சந்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இருந்த அருண் கோயல் தனது பதவியை கடந்த வாரம் […]

வரும் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த 2 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. அதன்படி, புதிய தேர்தல் ஆணையர்களாக ஞானேஷ் குமார் மற்றும் எஸ் எஸ் சந்து ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையராக ராஜீவ் குமார் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக இருந்த அருண் கோயல் தனது பதவியை கடந்த வாரம் ராஜினாமா செய்தார். மேலும், மற்றொரு தேர்தல் ஆணையராக இருந்த சந்திரா பாண்டே கடந்த வருடம் ஓய்வு பெற்றதை அடுத்து, 2 பணியிடங்கள் காலியாக இருந்தன. அந்த பொறுப்பிற்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுக்பீர் சந்து பஞ்சாப் மாநிலத்தையும், ஞானேஷ் குமார் கேரள மாநிலத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் இருவரும் பிரதமர் மோடி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu