ஹவாய் - கிளேயா எரிமலை 3 வது முறையாக வெடிப்பு

September 11, 2023

ஹவாய் நாட்டில் உள்ள கிளேயா எரிமலை, நிகழாண்டில் மூன்றாவது முறையாக சீற்றம் அடைந்து வெடித்து சிதறி உள்ளது. இதனால், எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில், ஹவாய் நாட்டில் உள்ள கிளேயா எரிமலை சீற்றம் அடைந்தது. தற்போது, மீண்டும் சீற்றமடைய தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்புகள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிந்து வருகின்றன. இதுவரையில் லாவா குழம்புகளால் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு பாதிப்புகள் நேரவில்லை என […]

ஹவாய் நாட்டில் உள்ள கிளேயா எரிமலை, நிகழாண்டில் மூன்றாவது முறையாக சீற்றம் அடைந்து வெடித்து சிதறி உள்ளது. இதனால், எரிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில், ஹவாய் நாட்டில் உள்ள கிளேயா எரிமலை சீற்றம் அடைந்தது. தற்போது, மீண்டும் சீற்றமடைய தொடங்கியுள்ளது. எரிமலையில் இருந்து வெளியேறும் லாவா குழம்புகள் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வழிந்து வருகின்றன. இதுவரையில் லாவா குழம்புகளால் அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு பாதிப்புகள் நேரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எரிமலை தற்போது வெடித்து சிதறுவதற்கு முன்பாக, நிலநடுக்கம் போன்ற தீவிர அறிகுறிகள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, ஏற்கனவே விடுக்கப்பட்ட ஆரஞ்சு அலர்ட் உயர்த்தப்பட்டு, ரெட் அலர்ட் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. கிளேயா எரிமலை, உலகின் துடிப்பான எரிமலைகளில் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu