ஹெச்டிஎஃப்சி வங்கி காலாண்டு லாபம் 30% உயர்வு

July 17, 2023

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ஹெச்டிஎஃப்சி வங்கி 30% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. வங்கி வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் படி, வங்கியின் நிகர லாபம் 11952 கோடியாகவும், மொத்த வருவாய் 57817 கோடியாகவும், பதிவு செய்யப்பட்டுள்ளது. வருவாயை பொறுத்தவரை, இது முந்தைய ஆண்டை விட 39% உயர்வாகும். மேலும், வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த வருவாய் 21% உயர்ந்து, 23599 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் செயல்பாட்டு லாபம் 22% உயர்ந்து, 18772 கோடியாக […]

கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், ஹெச்டிஎஃப்சி வங்கி 30% லாப உயர்வை பதிவு செய்துள்ளது. வங்கி வெளியிட்டுள்ள நிதிநிலை அறிக்கையின் படி, வங்கியின் நிகர லாபம் 11952 கோடியாகவும், மொத்த வருவாய் 57817 கோடியாகவும், பதிவு செய்யப்பட்டுள்ளது. வருவாயை பொறுத்தவரை, இது முந்தைய ஆண்டை விட 39% உயர்வாகும். மேலும், வங்கிக்கு வட்டி மூலம் கிடைத்த வருவாய் 21% உயர்ந்து, 23599 கோடியாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், வங்கியின் செயல்பாட்டு லாபம் 22% உயர்ந்து, 18772 கோடியாக பதிவாகியுள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் மொத்த வைப்புத்தொகை 19% உயர்ந்து, 19.13 லட்சம் கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், ஹெச்டிஎஃப்சி வங்கி, அதன் வீட்டு கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி உடன் இணைக்கப்பட்டுள்ளதால், மேலும் லாபம் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அத்துடன், இந்திய பங்குச் சந்தையில், எச்டிஎப்சி வங்கி பங்குகள் கிட்டத்தட்ட 1.2% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu