ஐக்கிய அரபு அமீரகங்களில் பெய்த கனமழையின் காரணமாக சென்னையில் இருந்து செல்லக்கூடிய விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது. சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியுள்ளது. இதன் எதிரொலியாக விமான போக்குவரத்து முழுதாக பாதிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக பரபரப்புடன் இயங்கக்கூடிய துபாய் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளநீர் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. விமான நிலையத்திற்கு வந்த பல விமானங்கள் பல்வேறு பகுதிகளுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும் சென்னையில் இருந்து துபாய் செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் இன்று துபாயில் இருந்த சென்னை வரும் ஐந்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.