அதிகளவில் வெளியேறும் அன்னிய முதலீடுகள்

February 8, 2023

கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரியில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர். அண்மைக் காலமாக இந்திய சந்தைகளில் முதலீடு செய்துவந்த அன்னிய முதலீட்டாளர்கள், ஜனவரியில் சீன சந்தைகள் அதிக ஈர்ப்புள்ளதாக மாறியதை அடுத்து முதலீடுகளை அதிகளவில் வெளியே எடுத்துள்ளனர். டிசம்பரில் 11 ஆயிரத்து 119 கோடி ரூபாயையும்; நவம்பரில் 36 ஆயிரத்து 238 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருந்த நிலையில் ஜனவரியில் வெளியே எடுத்துள்ளனர். இந்திய சந்தைகள் உலக சந்தைகளைவிட குறைவான செயல்திறனைக் […]

கடந்த ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஜனவரியில் அன்னிய முதலீட்டாளர்கள் தங்கள் முதலீடுகளை வெளியே எடுத்துள்ளனர்.

அண்மைக் காலமாக இந்திய சந்தைகளில் முதலீடு செய்துவந்த அன்னிய முதலீட்டாளர்கள், ஜனவரியில் சீன சந்தைகள் அதிக ஈர்ப்புள்ளதாக மாறியதை அடுத்து முதலீடுகளை அதிகளவில் வெளியே எடுத்துள்ளனர். டிசம்பரில் 11 ஆயிரத்து 119 கோடி ரூபாயையும்; நவம்பரில் 36 ஆயிரத்து 238 கோடி ரூபாயையும் முதலீடு செய்திருந்த நிலையில் ஜனவரியில் வெளியே எடுத்துள்ளனர்.

இந்திய சந்தைகள் உலக சந்தைகளைவிட குறைவான செயல்திறனைக் காண்பதால் வரும் மாதங்களில் அன்னிய முதலீடுகள் அதிக ஏற்ற இறக்கத்தை சந்திக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இந்திய சந்தைகளிலிருந்து பங்குகளை விற்று சீனா, ஹாங்காங், தென்கொரியா ஆகிய சந்தைகளில் குறைவான விலையில் கிடைக்கும் பங்குகளில் முதலீடு செய்து வருகின்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu