ஹமாஸ் தலைவரை கொல்ல ஏஜெண்டுகளை நியமித்த இஸ்ரேல்

August 3, 2024

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொல்ல இஸ்ரேல் உளவு அமைப்பு மூலம் ஈரானில் ஏஜென்ட்களை நியமித்தது தற்போது தெரியவந்துள்ளது. ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் கடந்த ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஈரான் வந்திருந்தார். அப்பொழுது அவருடைய வீட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் வாயிலாக வெடிக்கச் செய்து அவரை படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் […]

ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொல்ல இஸ்ரேல் உளவு அமைப்பு மூலம் ஈரானில் ஏஜென்ட்களை நியமித்தது தற்போது தெரியவந்துள்ளது.

ஈரான் அதிபராக மசூத் பெசஸ்கியான் கடந்த ஜூலை 30 அன்று பதவி ஏற்றார். இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஈரான் வந்திருந்தார். அப்பொழுது அவருடைய வீட்டில் புதைத்து வைத்திருந்த வெடிகுண்டை ரிமோட் கண்ட்ரோல் வாயிலாக வெடிக்கச் செய்து அவரை படுகொலை செய்தனர். இந்த படுகொலைக்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஹமாஸ் மற்றும் ஈரான் குற்றம் சாட்டி வருகிறது.

இந்நிலையில் இஸ்மாயில் தங்கி இருந்த வீட்டில் வெடிகுண்டுகளை வைத்தது இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் தான் என்று தகவல் வெளிவந்துள்ளது. இஸ்ரேலின் உளவுத்துறை அமைப்பான மொசாட் ஈரானில் ஏஜெண்டுகளை நியமித்து இந்த செயலை செய்துள்ளது. இஸ்மாயில் வழக்கம் போல் தங்கும் காவல் படையினர் வளாகத்திற்குள் அமைந்துள்ள மூன்று அறைகளில் வெடிகுண்டுகள் முன்பே மறைத்து வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அது ரிமோட் வாயிலாக வெடிக்க செய்து படுகொலை நடந்தேறியது. அமெரிக்காவின் சி ஐ ஏ வுக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய உளவு அமைப்பாக மொசாட் இருந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu