இந்திய விமானப்படையில் புதிய ஆயுத அமைப்பு கிளை அமைக்கப்படும் - மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி

October 8, 2022

இந்திய விமானப்படையின் 90-வது விமானப்படை தினம் சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வருடத்திற்கான தலைப்பு “எதிர்காலத்திற்கு ஏற்றவாறு விமானப்படையை மேம்படுத்துவது” என்பதாகும். டெல்லிக்கு வெளியே விமானப்படை தினம் கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்நிகழ்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி இந்த விழாவிற்கு தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், விமானப்படை அதிகாரிகளுக்காக, புதிய ஆயுத அமைப்பு கிளை ஒன்றை […]

இந்திய விமானப்படையின் 90-வது விமானப்படை தினம் சண்டிகரில் உள்ள விமானப்படைத் தளத்தில் கொண்டாடப்பட்டது. இந்த வருடத்திற்கான தலைப்பு “எதிர்காலத்திற்கு ஏற்றவாறு விமானப்படையை மேம்படுத்துவது” என்பதாகும். டெல்லிக்கு வெளியே விமானப்படை தினம் கொண்டாடுவது இதுவே முதல் முறையாகும். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்நிகழ்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் விவேக் ராம் சவுத்ரி இந்த விழாவிற்கு தலைமை வகித்தார். அப்போது பேசிய அவர், விமானப்படை அதிகாரிகளுக்காக, புதிய ஆயுத அமைப்பு கிளை ஒன்றை அமைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக கூறினார். மேலும், இந்திய விடுதலைக்குப் பின்னர், ஆயுத அமைப்பு கிளை அமைக்கப்படுவது இதுவே முதல் முறை என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “அடுத்த ஆண்டு முதல் ‘அக்னிபாதை’ திட்டத்தின் கீழ் இளைஞர்களை விமானப் படையில் சேர்க்க உள்ளோம். குறிப்பாக, வரும் டிசம்பர் மாதம் முதல், 3000 அக்னி வாயு வீரர்களை படையில் சேர்த்து, பயிற்சி அளிக்க உள்ளோம். திறமையான இந்திய இளைஞர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பு. இதற்காக, எங்களது பயற்சி செயல்பாட்டு முறைகளை மாற்ற திட்டமிட்டுள்ளோம்” என்று கூறினார்.

அத்துடன், புதிதாக அமைக்கப்பட இருக்கும் ஆயுத அமைப்பு கிளை குறித்த விவரங்களைப் பகிர்ந்தார். இந்த கிளையின் மூலம், அனைத்து வகையான நவீன ஆயுதங்களையும் கையாள முடியும் என்று கூறினார். மேலும், “தரையிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்கை தாக்கும் ஏவுகணைகள், தொலைதூரத்திலிருந்து இயக்கப்படும் ஆளில்லா விமானம் போன்றவை இந்த அமைப்பில் செயல்படும். ஒரே கூரையின் கீழ், இதனை நிர்வகிப்பதால், இந்திய அரசுக்கு சுமார் 3400 கோடி ரூபாய் சேமிக்கப்படும்” என்று விளக்கினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu