என்பிஏ மற்றும் என். ஐ. ஆர்.எப் நடத்திய தரவரிசையில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்துள்ளது.
என்பிஏ மற்றும் என். ஐ. ஆர்.எப் தரவரிசை ஆய்வில், சென்னை ஐஐடி நாட்டின் முன்னணி கல்வி நிறுவனமாகத் தேர்வாகியுள்ளது. பெங்களூரு ஐஐஎஸ்சி மற்றும் மும்பை ஐஐடி முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன. ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகங்கள் பிரிவில், பெங்களூரு ஐஐஎஸ்சி முதலிடம் பிடித்துள்ளது. மேலாண்மையிலும், அகமதாபாத் ஐஐஎம் முதல் இடத்தைப் பிடித்தது. மருத்துவப் பிரிவில் டெல்லி எய்ம்ஸ் மற்றும் பல் மருத்துவத்தில் சென்னையின் சவீதா இன்ஸ்டிடியூட் முன்னணி இடங்களைப் பிடித்துள்ளன.














