சென்னை ஐஐடி விஞ்ஞானிகள், 14 முதல் 24 வார வயதுடைய ஐந்து கருக்களின் மூளையைப் பயன்படுத்தி முப்பரிமாண அட்லஸ் ஒன்றை உருவாக்கியுள்ளனர். உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட 5,000 க்கும் மேற்பட்ட உயர் தெளிவுத்திறன் படங்கள், இதே போன்ற மேற்கத்திய திட்டங்களின் மொத்த செலவில் பத்தில் ஒரு பங்கு செலவில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திறந்த மூல அட்லஸ், 500 க்கும் மேற்பட்ட மூளைப் பகுதிகளை வரைபடமாகக் கொண்டுள்ளது. இது பார்கின்சன், அல்சைமர் மற்றும் பக்கவாதம் போன்ற நரம்பியல் தொடர்பான நோய்களுக்கான ஆராய்ச்சிகளுக்குப் பெரிதும் உதவும்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் அவர்களின் 15 மில்லியன் டாலர் நிதி உதவியுடன் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், தரணி என்ற அதிநவீன இமேஜிங் தளத்தைப் பயன்படுத்தி 70 மூளைகளைச் செயலாக்கியுள்ளது. இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் ‘ஜர்னல் ஆஃப் கம்பேரிட்டிவ் நியூராலஜி’ என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளன.