இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் உட்பட 27 நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய யூனியன் தடை விதிக்க உள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா மேலும் வலுவலுவடைவதை தடுக்கும் நோக்கில் ஐரோப்பிய யூனியன் நடவடிக்கை ஒன்று எடுத்துள்ளது. அதன்படி இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் உட்பட 27 நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு அது தடை விதிக்க உள்ளது. இது தொடர்பாக ஐரோப்பிய யூனியன் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் ரஷ்ய இராணுவம் மற்றும் பாதுகாப்பு தொழில் துறையுடன் தொடர்புள்ள 27 நிறுவனங்களின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களின் சரக்குகள் மற்றும் தொழில்நுட்பங்கள், ரஷ்யாவின் ராணுவ திறனை மேம்படுத்தக்கூடிய தொழில்நுட்பம் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த 27 நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் ரஷ்யாவை சேர்ந்தவை. நான்கு நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை. எஞ்சிய நிறுவனங்கள் தாய்லாந்து, இந்தியா, செர்பியா, இலங்கை, துருக்கி, கஜகஸ்தான் போன்ற நாடுகளை சேர்ந்தவையாகும். இந்த நிறுவனங்களின் பெயர்களை ஐரோப்பிய யூனியன் வெளியிடவில்லை.